ரோம்: கொரோனா நோய் தோன்றிய சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பை கொரோனா தொற்று வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் இதவரை 69,176 பேர் பாதிப்படைந்துள்ளனர். 6,820 உயிரிழந்துள்ளனர். 8,326 பேர் குணமடைந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த இத்தாலி முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இத்தாலியில் 95 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளது நம்பிக்கையளிப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இத்தாலி நாட்டின் மடோனாவைச் சேர்ந்த, ஆல்மா கிளாரா கோசினி 95 வயது பாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் மார்ச் 5ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, விரைவிலேயே குணமாகி வீடு திரும்பியுள்ளார். வைரஸ் தடுப்பு மருந்து எதனையும் எடுத்துக் கொள்ளாமலே கொரானாவிலிருந்து குணமடைந்துள்ளார். அவர் மருத்துவர்களின் சேவையைப் பற்றி கூறும்போது, "டாக்டர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர், பரிவுடன் நடந்து கொண்டனர், கொரோனா நோயிலிருந்து காப்பாற்றிவிட்டனர் அவர்களுக்கு எனது நன்றி." என்றார்.